ADDED : ஆக 10, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கண்டித்து, மா.கம்யூ.,கட்சியினர் சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசுகையில், ''பா.ஜ.,வுக்கு எதிராக இருப்பவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பீகார் மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த மாநிலத்தில், 65 லட்சம் பேரை போலி வாக்காளர்கள் என தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்து உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.
கட்சி நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, கிருஷ்ணமூர்த்தி, அஜய்குமார், தெய்வேந்திரன், கனகராஜ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

