ADDED : மார் 08, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
கோவை மார்ச் 8 -: கோவையில், மா.கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் மறைந்த வெங்கிடுவின், 24ம் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மா.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் அஞ்சலி உரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் மூர்த்தி, மணி, கோவை தெற்கு நகர குழு செயலாளர் சுபாஷ்,வடக்கு நகர குழு செயலாளர் நாராயணசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
