/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளை கடிக்கும் வெறி நாய்கள்
/
கால்நடைகளை கடிக்கும் வெறி நாய்கள்
ADDED : ஏப் 27, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : கோவை வடக்கு பகுதியில் குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகள், உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரவு, 10:00 மணிக்கு மேல் தெருவில் கூட்டமாக சுற்றும் நாய்களால், இருசக்கர வாகனங்களில் பணி முடித்து வரும் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பூச்சியூர் பகுதியில் வெறி நாய்கள் கட்டி போட்டு இருந்த மாட்டை கடித்து காயம் ஏற்படுத்தியது. நாய்களை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கா விட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

