ADDED : ஆக 31, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாப்பிள்ளைகவுண்டன்புதுாரில், 1,501வது மிலாடிநபி விழா மற்றும் ரஹ்மானியா மக்தப் மதரஸா ஆண்டு விழா நடந்தது. அதில், இஸ்லாமிய உரையாடல், வினாடி -– வினா போட்டிகள் நடைபெற்றன. மதரஸா மாணவர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் அத்திக்கடை வாஹித் பாத்திமா அரபிக்கல்லுாரி பேராசிரியர் ஷாஹுல் ஹமீது வாஹிதி பேசினார். பொதுமக்களுக்கு, கந்துாரி விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை பள்ளி வாசல் நிர்வாகத்தினர், உஸ்தாத் தமீம் அன்சாரி ஜைனி, கமருன்னிஸா ஆகியோர் செய்திருந்தனர்.
