தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி வரத்து குறைவு :தக்காளி விலை உயர்வு

காய்கறி வரத்து குறைவு :தக்காளி விலை உயர்வு

காய்கறி வரத்து குறைவு :தக்காளி விலை உயர்வு


UPDATED : ஆக 31, 2026 07:33 PM

ADDED : ஆக 31, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:33 PM ADDED : ஆக 31, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 400 ரூபாய், தேங்காய் (ஒன்று) - - 30, கத்திரிக்காய் கிலோ - 57, முருங்கைக்காய் --- 30, வெண்டைக்காய் --- 40, முள்ளங்கி --- 18, பூசணிக்காய் -- 10, அரசாணிக்காய் -- 12, பாகற்காய் ----- 40, புடலை --- 22, சுரைக்காய் --- 22, பீர்க்கங்காய் --- 50, வெள்ளரிக்காய் --- 30, அவரைக்காய் --- 65, பீட்ரூட் --- 38, மற்றும் பச்சை மிளகாய் --- 40 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், தக்காளி (15 கிலோ) --- 200, கத்திரிக்காய் கிலோ - 7, முருங்கைக்காய் --- 5, பாகற்காய் -- 15 வெள்ளரிக்காய் -- 10 அவரைக்காய் -- 5 மற்றும் பீட்ரூட் --- 3 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

இதே போன்று, வெண்டைக்காய் --- 25, முள்ளங்கி --- 5, அரசாணிக்காய் --- 8, புடலை --- 13, சுரைக்காய் --- 12, பீர்க்கங்காய் மற்றும் பச்சை மிளகாய் --- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்றும் ஒவ்வொரு காய்கறியிலும், தலா, 150 கிலோ வரை வரத்து குறைவாக இருந்தது. வரும் நாட்களில் வரத்து உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us