தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிமென்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் கழிவு  ‘பேக்கிங்’

சிமென்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் கழிவு  ‘பேக்கிங்’

சிமென்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் கழிவு  ‘பேக்கிங்’


ADDED : ஆக 31, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் பயன்பாடற்ற பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத மற்றும் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் கழிவுகள், முறையாக பிரித்தெடுக்கப்பட்டு, மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதற்காக அரியலுாரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன.

அதன்படி, கடந்த, இரண்டு நாட்களாக பொள்ளாச்சி நகராட்சி நல்லுார் குப்பை கிடங்கில் இருந்து, 30 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சிமென்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பும் நடவடிக்கையால், நகராட்சியில் உருவாகும் பயன்பாடற்ற பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதும், எரிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டு, அறிவியல் முறையில் கழிவு மேலாண்மை செய்வதுடன், கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சியை துாய்மையான மற்றும் பிளாஸ்டிக் கழிவு இல்லாத நகரமாக உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us