/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை அரசு பள்ளியில் முப்பெரும் விழா உற்சாகம்
/
மதுக்கரை அரசு பள்ளியில் முப்பெரும் விழா உற்சாகம்
ADDED : ஜூலை 15, 2025 09:03 PM

போத்தனூர்; கோவை, மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின், 123வது பிறந்த நாள், கல்வி ஊக்கத் தொகை வழங்கல், இலக்கிய மன்ற துவக்கம் ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.
பெற்றோர் -- ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமையில் விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான நீதிபதி விஜயகுமார், காமராஜர் படத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நீதிபதியுடன், வக்கீல் முத்துசாமி, ஜனநாயக தூண்கள் பொது நல அறக்கட்டளையின் பொது செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் இணைந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் மற்றும் தனி பாடங்களில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கட்கும், 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகையை வழங்கினர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஷகிலா வரவேற்றார். கவுன்சிலர் சலாம்பாஷா, பெற்றோர் - ஆசிரியர் கழக துணை தலைவர் ராமலிங்கம், முன்னாள் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி, விஜயாபானு, உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜனநாயக தூண்கள் பொது நல அறக்கட்டளை,பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.