/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் திருவிழா
/
மாகாளியம்மன் கோவில் திருவிழா
ADDED : மார் 05, 2026 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கொங்கலப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே, கொங்கலப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. நேற்று, ஐந்து நதி தீர்த்தம், புனித நீர் இட்டு சக்தி கும்பம் எடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, காலையில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு, பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதன்பின், பக்தர்கள், பொதுமக்கள், பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர். நாளை அம்மனுக்கு சப்பரம் எடுத்து ஊர்வலம், மஞ்சள் நீராடல், ஊர்சுற்றி சோறு இடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

