/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் ஸ்ரீ வற்றியம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா
/
சூலுார் ஸ்ரீ வற்றியம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 19, 2024 01:34 AM
கோவை;சூலுார் ஸ்ரீ வற்றியம்மன் குலதெய்வ திருக்கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா, வரும் 22ம் தேதி நடக்கிறது.
சூலுார் ஸ்ரீ வற்றியம்மன் குலதெய்வ திருக்கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு சிவாச்சாரியர்கள் முன்னிலையில், முகூர்த்தகால் விழா நடந்தது. நாளை மாலை 5:00 மணிக்கு வற்றியம்மனுக்கு முதற்கால யாகபூஜை மங்கள இசை, மஹா கணபதி, புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, கும்பஸ்தாபனம், 108 திரவ்யயாகம் நடக்கிறது.
வரும் 21ம் தேதி, இரண்டாம் கால யாகபூஜை காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. மங்களஇசை, விசேஷசந்தி, வேதிகார்ச்சனை, திருமுறை சமர்ப்பணம், மஹாதீபாராதனை நடக்கிறது.
வரும் 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, ஸ்ரீவற்றியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தசதரிசனம், உபசாரம், மஹாதீபாராதனை நடைபெறும்.
திரளானோர் பங்கேற்க, கோவில் விழாக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

