/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜகணபதி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
/
ராஜகணபதி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
ADDED : ஜன 20, 2025 10:57 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, குமரன் நகர் ராஜகணபதி கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
பொள்ளாச்சி குமரன் நகரில், ராஜகணபதி கோவில் நுாதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இருந்து தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில், கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. விநாயக பெருமானுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை, ராஜகணபதி விமான கோபுர கும்பாபிேஷகம், மூலாலய மஹா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, கோபுர தரிசனம் கண்டு, சுவாமியை வழிபட்டனர்.

