/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : டிச 16, 2025 07:44 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா, 14ம் தேதி துவங்கியது. மங்கள இசை, திருநீறு பூஜை, ஜோதி பூஜை, மகா கணபதி பூஜை, வேள்வி, காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி பூஜை, சுவாமி திருவீதி உலா, முளைப்பாரி எடுத்தல் மற்றும் புனித தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, கோபுர கலசம் வைத்தல் மற்றும் செல்வ விநாயகர் நிலை நாட்டுதல் நடந்தது. நேற்று, அதிகாலையில் மகா சங்கல்ப பூஜை, செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா வேள்வி நடந்தது. அதன்பின், செல்வ விநாயகர் கோபுர கலசத்துக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது.

