ADDED : ஆக 28, 2025 05:41 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் பெரிய விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, முத்துக்கவுண்டனூர் பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 26ம் தேதி, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது.
தொடர்ந்து, முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று, காலையில், மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி, வேள்வி நிறைவு மற்றும் பேரொளி வழிபாடும், தொடர்ந்து, மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதில், சொக்கனூர் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தொடர்ந்து சுவாமிக்கு, பெரும் திருமஞ்சனம், பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.

