/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 25, 2025 09:30 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம்புதூர் பட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை, 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம்புதூர் பட்டத்தரசியம்மன், வெள்ளையம்மன், பொம்மி அம்மன் சமேத மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று, 26ம் தேதி துவங்குகிறது.
இதில், காலை, 10:00 மணிக்கு, முளைப்பாலிகை, கோபுர கலசம், தீர்த்தக்குடம் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி, பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடக்கிறது.
நாளை, 27ம் தேதி, காலை 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்கிறது. காலை, 6:15 மணிக்கு, கலசம் புறப்பாடு, 6:30 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், 7:00 மணிக்கு, விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.