/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவசக்தி விநாயகர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
/
சிவசக்தி விநாயகர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜன 20, 2024 12:01 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, தொழிற்பேட்டையில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில், நாளை, 21ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பொள்ளாச்சி, தொழிற்பேட்டையில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை மற்றும் கோ பூஜையுடன் துவங்கியது.
நேற்று, மங்கள இசை, இரண்டாம் கால யாகம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி நடந்தது. இன்று, காலை, 8:45 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமங்கள், வேத பாராயணம் நடக்கிறது. அதன்பின், அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:15 மணிக்கு, ஐந்தாம் கால பூஜை, நவகிரக மண்டப ஆராதனை நடக்கிறது.
நாளை, 21ம் தேதி, காலை, 5:00 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, பிராண பிரதிஷ்டை நடக்கிறது. காலை, 6:15 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும், காலை, 7:30 மணிக்கு, அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், கலச தீர்த்த மஹா அபிஷேகம், தசதரிசனம், மஹா தீபாராதனை, கங்கண விசர்ஜனம் நடக்கிறது.