/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நித்தீஸ்வரர் கோவிலில் மகா ருத்ர யாகம்
/
நித்தீஸ்வரர் கோவிலில் மகா ருத்ர யாகம்
ADDED : ஜூலை 29, 2025 07:12 PM
நெகமம்:
நெகமம், நித்தீஸ்வரர் கோவிலில், நான்கு நாட்கள் நடக்கும் மகா ருத்ர யாகம் நேற்று துவங்கியது.
நெகமம், நித்தீஸ்வரர் கோவிலில், மக்கள் நலம் பெறவும் விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் சிறப்பு மகா ருத்ர யாகம் நான்கு நாட்கள் நடக்கிறது. நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நிகழ்ச்சிகளுடன் யாகம் துவங்கியது.
இன்று, காலை 6:00 மணிக்கு, மங்கள இசை, 7:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகங்கள், தீபாராதனை நடக்கிறது.
நாளை, காலை 6:30 மணிக்கு யாக பூஜைகள், அம்மனுக்கு கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 11:00 மணிக்கு கும்ப அலங்காரம், உச்சி கால பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வாயிலாக விசேஷ சாந்தி, விநாயகர் வழிபாடு மற்றும் மூல மந்திர ஜெபம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. வரும், ஆக., 1ம் தேதி, சுவாமிக்கு லட்சார்ச்சனை பூஜைகள் நடக்கிறது.