/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜஸ்தானி சங்கத்தில் மஹா ருத்ராபிஷே கம்
/
ராஜஸ்தானி சங்கத்தில் மஹா ருத்ராபிஷே கம்
ADDED : ஜூலை 27, 2025 11:09 PM
கோவை; ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை ராஜஸ்தானி சங்கத்தில் மஹா ருத்ராபிஷேகம் சிவாச்சாரியர்கள் பக்தர்கள் சூழ, விமரிசையாக நடந்தது.
ஸ்ரவண மாதமான ஆடிமாதத்தில், மஹாருத்ராபிஷேக பூஜைகள் செய்தால் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான, 12 ஜோதிர் லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனடிப்படையில் நேற்று கோவை ராஜஸ்தானி சங்கத்தில், மஹாருத்ராபிஷே கம் நடந்தது.
தொடர்ந்து, நாடு முழுக்க இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், பசும்பால், தாமரை, தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி சர்க்கரை, அரிசிமாவு, தேன், நெய் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றன.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அபிஷேகம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு மஹா அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனை, மஹா பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.