/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாலட்சுமி கோவில் முப்பெரும் விழா
/
மகாலட்சுமி கோவில் முப்பெரும் விழா
ADDED : செப் 05, 2025 10:14 PM
போத்தனுார்:
குனியமுத்துார் அடுத்த இடையர்பாளையத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில், சண்டி யாகம், வருஷாபிஷேகம் மற்றும் திருவிளக்கு வழிபாடு ஆகிய முப்பெரும் விழா நேற்று முன்தினம் காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
மாலை விநாயகர் பூஜை, மத்ருகா பூஜை, தீபஸ்தாபனம், சப்தசதி பூஜை உள்ளிட்டவை நடந்தன.
நேற்று காலை சண்டி ஹோமம், கன்னிகா பூஜை, மகாலட்சுமி அம்மனுக்கு 16 விதமான அபிஷேகம், விசேஷ பூஜை, தீபாராதனை நடந்தன. மாலை திருவிளக்கு வழிபாடு நடந்தது. திரளானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
இன்று காலை 10.30 மணிக்கு பால் ஊற்றுதல், மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.