ADDED : அக் 03, 2024 05:25 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், மாலை, 5:30 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விஷ்ணு சகஸ்ரநாமண பாராயண குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது.
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு குடும்பத்தினர் திதி கொடுத்து வழிபட்டனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மஹாளய அமாவாசை தினமான நேற்று, காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.
வால்பாறை சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட பகுதியில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.