/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாமாரியம்மன் கோவில் ஆண்டு விழா உற்சாகம்
/
மகாமாரியம்மன் கோவில் ஆண்டு விழா உற்சாகம்
ADDED : ஜூன் 01, 2025 01:32 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 2023 மே 24ம் தேதி நடந்தது. கோவிலின் இரண்டாம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் கோவில் வளாகத்தில் நடந்தது.
விழாவையொட்டி சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. கன்னிமூல கணபதி, அரச மரத்தடி விநாயகர், நவகிரகங்கள், கன்னிமார் தெய்வங்களுக்கும், சிறப்பு அலங்கார பூஜை, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது.
மகா மாரியம்மன் வெள்ளி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.