/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் யார்டில் பராமரிப்பு; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
போத்தனுார் யார்டில் பராமரிப்பு; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
போத்தனுார் யார்டில் பராமரிப்பு; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
போத்தனுார் யார்டில் பராமரிப்பு; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : டிச 04, 2024 11:04 PM
கோவை; போத்தனுார் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்வதாக, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று, நாளை மற்றும் 8ம் தேதி பல்வேறு ரயில்களின் இயக்கம் மாற்றப்படுகிறது. சொரனுார் - கோவை(06458) ரயில், மதுரை - கோவை(16722), கண்ணுார் - கோவை(16607), ஆகிய ரயில்கள் போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டுப்பாளையம் - போத்தனுார்(06815) கோவை வரை மட்டுமே இயக்கப்படும்.
கோவை - கண்ணுார்(16608), கோவை - மதுரை(16721), போத்தனுார் - மேட்டுப்பாளையம்(06816), கோவை - சொரனுார்(06459) ஆகிய ரயில்கள், போத்தனுாரில் இருந்து புறப்பட்டு செல்லும் என, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது,