sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பராமரிப்பு பணிகள் எதிரொலி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

/

பராமரிப்பு பணிகள் எதிரொலி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் எதிரொலி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் எதிரொலி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஜூலை 09, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில், மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதை முன்னிட்டு, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கண்ணுார் - கோவை(16607) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை மற்றும், 12 ம் தேதி கண்ணுாரில் இருந்து பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு - கோவை சந்திப்பு இடையே இயக்கப்படாது.

மதுரை -கோவை( 16722) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை மற்றும், 12ம் தேதி போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனுார் - கோவை இடையே இயக்கப்படாது. மேட்டுப்பாளையம் -போத்தனுார்(66615) மெமு ரயில், நாளை மற்றும், 12ம் தேதி கோவை வரை மட்டுமே இயக்கப்படும். கோவை -போத்தனுார் இடையே இயக்கப்படாது.

அதேபோல், கோவை -மதுரை(16721) ரயில் நாளை மற்றும், 12 ம் தேதி, கோவைக்கு பதிலாக பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும். கோவை - கண்ணுார்(16608) ரயில், நாளை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில், போத்தனுாரில் இருந்து மதியம் 2:03 மணிக்கு புறப்படும்.

போத்தனுார் - மேட்டுப் பாளையம்(66616)மெமு ரயில், 8, 10, 12 ம் தேதிகளில், போத்தனுாருக்கு பதிலாக கோவையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us