/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் 'காட்சியா' சார்பில் பராமரிப்பு பணி
/
அரசு பள்ளியில் 'காட்சியா' சார்பில் பராமரிப்பு பணி
ADDED : ஆக 05, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (காட்சியா) சமுதாய குழு சார்பில், கே.என்.ஜி.புதுார் அரசு ஆரம்பப்பள்ளியில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டிலான பராமரிப்பு பணிகளை, சங்க தலைவர் செவ்வேள், துணை தலைவர் ராமலிங்கம், செயலாளர் பிரேம் குமார்பாபு, சோசியல் கமிட்டி தலைவர் சேனாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினர். மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்ற எழுதுபொருட்களும், இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

