/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோளம் பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
/
மக்காச்சோளம் பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
மக்காச்சோளம் பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
மக்காச்சோளம் பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 10:26 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும் காரிப் பருவத்தில், சோளம், 900 ஹெக்டேர் மற்றும் மக்காச்சோளம், - 25 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விவசாயிகள் சோளம் மற்றும் மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த இரண்டு பயிர்களுக்கும் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதில், சோளம் பயிருக்கு பிரீமிய தொகை, 241 ரூபாய் (ஒரு ஏக்கருக்கு) செலுத்த வேண்டும். இதற்கு, காப்பீட்டு தொகை 12,052 ரூபாயாகும். இதே போன்று, மக்காச்சோளம் பயிருக்கு பிரீமிய தொகை, 726 ரூபாய் (ஒரு ஏக்கருக்கு) செலுத்த வேண்டும். இதற்கு காப்பீட்டு தொகை, 36,300 ரூபாயாக உள்ளது. இதற்கு, செப்., 19-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விவசாய பதிவு படிவம், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ், அடங்கல், சிட்டா, ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, இ-சேவை மையம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகள் கூடுதல் விபரங்களை பெற, வேளாண் விரிவாக்க மையம் அல்லது உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் குருசாமி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.