ADDED : ஏப் 13, 2026 04:52 AM

கோவை: மெஜஸ்டின் ஜூவல்லரியின் மூன்றாவது கிளை கிராஸ்கட் ரோட்டில் திறக்கப்பட்டது.
கோவை பெரியகடை வீதி, ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களை அடுத்து கிராஸ்கட் ரோட்டில் மெஜஸ்டின் ஜூவல்லரியின் மூன்றாவது கிளை நேற்று திறக்கப்பட்டது. மூன்று தளங்களை கொண்ட இந்நகைக்கடையில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சிவகணேஷ் ஜூவல்லரி கடையை திறந்து வைத்தார். ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர்கள் உடனிருந்தனர்.
மெஜஸ்டின் ஜூவல்லரி மார்க்கெட்டிங் மேனேஜர் சுரேஷ் கூறுகையில்,''எங்களிடம் உள்ள நகைகளில் ஒவ்வொரு டிசைனுக்கும் தனித்துவம் உள்ளது. இங்கு வருபவர்கள் நகை வாங்காமல் போவதில்லை. திறப்பு விழா சலுகையாக, ஒரு சவரன் தங்கத்துக்கு ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. வைரம் வாங்குபவர்களுக்கு கேரட்டுக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இம்மாதம் வரை இச்சலுகை வழங்கப்படும்,'' என்றார்.
