/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேஜர் தயான் சந்த் நினைவு ஹாக்கி போட்டி; 'சூப்பர் லீக்' முறையில் கே.சி.டி., சாம்பியன்

ADDED : பிப் 13, 2025 12:10 AM
கோவை; பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த, 17வது தயான் சந்த் நினைவு கோப்பை ஹாக்கி போட்டியில், கே.சி.டி., அணி 'சாம்பியன்ஷிப்' வென்றது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 17வது 'மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பை'க்கான, மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, பீளமேடு பி.எஸ்.ஜி., டெக் மைதானத்தில், நான்கு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 10 அணிகள் மூன்று குழுக்களாக 'லீக்' முறையில் போட்டியிட்டன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து, நான்கு அணிகள் பங்கேற்ற சூப்பர் 'லீக்' போட்டி நடந்தது. இதில், பி.பி.ஜி.ஐ.டி., அணி, 1-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., டெக் அணியை வென்றது. தொடர்ந்து, கே.சி.டி., அணி, 3-0 என்ற கோல்களில், பி.எஸ்.ஜி., டெக் அலுமினி அணியையும் வென்றது.
பி.பி.ஜி.ஜ.டி., அணி, 2-1 என்ற கோல் கணக்கில், பி.எஸ்.ஜி., டெக் அலுமினி அணியையும், கே.சி.டி., அணி, 3-0 என்ற கோல்களில், பி.எஸ்.ஜி., டெக் அணியையும், பி.எஸ்.ஜி., டெக் அணி, 4-1 என்ற கோல்களில் பி.எஸ்.ஜி., டெக் அலுமினி அணியையும், கே.சி.டி., அணி, 1-0 என்ற கோல்களில் பி.எஸ்.ஜி., டெக் அணியையும் வென்றது.
முடிவில், கே.சி.டி., அணி முதலிடத்தையும், பி.பி.ஜி.ஐ.டி., அணி இரண்டாம் இடத்தையும், பி.எஸ்.ஜி., டெக் அணி மூன்றாம் இடத்தையும், பி.எஸ்.ஜி., டெக் அலுமினி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.