ADDED : ஜன 02, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண கோவிலில், ஜன. 14ம் தேதி வரை மண்டல மஹோற்சவம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை முதல் அலங்கார பூஜை, தீபாராதனை, நட்சத்திர பூஜை, பஜனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 20ம் தேதி, படி பூஜை , 27ம் தேதி விளக்கு ஊர்வலம், யானை மீது ஐயப்பன் ஊர்வலம், பறையெடுப்பு நடத்தப்பட்டன. வரும் 14ம் தேதி மகரஜோதிக்கு பின், சிறப்பு பூஜை, படி பூஜை நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ சபரிஸ சேவா சமாஜம் செய்துவருகிறது.

