/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் வாயிலாக உபரி நீரை கொண்டு செல்ல திட்டம் செல்வசிந்தாமணியில் இருந்து வாலாங்குளத்துக்கு

ADDED : ஜன 02, 2026 05:01 AM
கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும்போது, செல்வசிந்தாமணி குளத்தின் உபரி நீரை, குழாய் மூலமாக வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரித்துள்ளது மாநகராட்சி.
கோவையில் சங்கிலித் தொடர் போல் ஒன்றன் பின் ஒன்றாக குளங்கள் அமைந்திருக்கின்றன. அதில், ஒன்பது குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. உக்கடம் பெரிய குளத்துக்கு நொய்யல் ஆற்றில் சேத்துமா வாய்க்கால் வழியாகவும், செல்வ சிந்தாமணி குளம் வழியாகவும் தண்ணீர் வரும். உக்கடம் குளம் நிரம்பியதும் வாலாங்குளம் சென்றடையும்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சீரமைத்த போது, உபரி நீர் வழிந்தோடும் மிகைபோக்கியை மதகு போன்ற கட்டமைப்பாக உருவாக்கி விட்டனர். குளம் நிரம்பியதும் தண்ணீர் ஆற்றுக்கு சென்று விட்டது. நொய்யல் ஆற்றில் இருந்து வரும் நீரை வாலாங்குளத்துக்கு கொண்டு வர முடியவில்லை.
அதேநேரம், செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதற்கு தீர்வு காண, செல்வ சிந்தாமணியில் இருந்து நேரடியாக வாலாங்குளத்துக்கு குழாய் மூலம் கொண்டு வர, 6 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அரசு ஒப்புதல் பெற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
''ரோட்டுக்கு கீழே ஒரு மீட்டர் விட்டமுள்ள குழாய் பதித்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வாய்க்காலில் இணைத்து புதுத்தண்ணீர் சேர்ப்பிக்கப்படும். மாநகராட்சி பொது நிதியில் இதை செயல்படுத்த அனுமதி கோரி, திட்ட அறிக்கை அனுப்ப உள்ளோம்,'' என்று கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.