/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அரையிறுதியில் வீரர், வீராங்கனை அதிரடி
/
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அரையிறுதியில் வீரர், வீராங்கனை அதிரடி
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அரையிறுதியில் வீரர், வீராங்கனை அதிரடி
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அரையிறுதியில் வீரர், வீராங்கனை அதிரடி
ADDED : ஜூன் 01, 2025 11:08 PM

கோவை: தேசிய கூடைப்பந்து போட்டியில் முன்னணி அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
கோவை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள், பெண்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மே, 28 முதல் நேற்று வரை நடந்தது.
'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் நடந்த போட்டியில் வீரர், வீராங்கனைகள் பிரிவில் தலா எட்டு அணிகள் விளையாடின.
பல்வேறு சுற்றுகளை அடுத்து பெண்களுக்கான முதல் அரையிறுதி போட்டியில், கேரள மின் வாரிய அணியும் (திருவனந்தபுரம்), சென்னை வருமான வரி அணியும் மோதின. துவக்கம் முதலே புள்ளிகளை குவித்த கேரள அணி வீராங்கனைகள், 85-49 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாம் அரையிறுதியில், செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும், தென் மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில், தென் மேற்கு ரயில்வே அணி, 65-62 என்ற புள்ளிகளில், தென் மத்திய ரயில்வே அணியை வென்றது. தென் மேற்கு ரயில்வே வீராங்கனை கிருத்திகா, 25 புள்ளிகள் அதிகபட்சமாக எடுத்தார்.
ஆண்களுக்கான முதல் அரையிறுதியில், சென்னை வருமான வரி அணியும், டில்லி இந்திய விமானப்படை அணியும் மோதின.
இந்திய விமானப்படை அணி, 79-64 என்ற புள்ளிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இரண்டாம் போட்டியில், சென்னை இந்தியன் வங்கி அணியும், இந்திய கடற்படை அணியும் மோதியது.
இந்தியன் வங்கி வீரர்கள் புள்ளிகளை குவிக்க, 98-64 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.