ADDED : நவ 03, 2025 11:40 PM

பெ.நா.பாளையம்:  சின்னதடாகம் அருகே பாலாஜி கார்டன், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சுமார், 30 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் இறந்து கிடப்பதாக செங்கல் சூளையின் உரிமையாளர் பிரதீப் கண்ணன், தடாகம் போலீசில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, தடாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து போன நபர் சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த ராகவன், 36; டிரைவர் என தெரிய வந்தது. இவர் தனது மனைவியை ஆறு மாதமாக பிரிந்து வாழ்கிறார் என்றும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் தெரிய வந்தது. மது அருந்தும் பழக்கமுடைய ராகவன் குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது தாக்கி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

