/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கலைத்திருவிழா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
/
மாவட்ட கலைத்திருவிழா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
மாவட்ட கலைத்திருவிழா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
மாவட்ட கலைத்திருவிழா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
ADDED : நவ 03, 2025 11:41 PM

பொள்ளாச்சி:  கோவை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில், ஆனைமலை ஒன்றியம் நரசிம்மன்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி சாரா தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், 2025-26 கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், பள்ளி மற்றும் வட்டார அளவில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
களிமண் சிற்பம், மணல் சிற்பம், ரங்கோலி, தனி நபர் நடனம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதில், ஆனைமலை ஒன்றியம், நரசிம்மன்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவ, மாணவியரை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட 'ஏஞ்சல்' குழுவினர், நாட்டுப்புற குழு நடனத்தில், முதலிடம் பிடித்தனர்.
இதேபோல, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாணவி தனுஸ்ரீ முதலிடம் பிடித்தார். இதன் வாயிலாக, இவர்கள், கரூரில் நடக்கவுள்ள மா நில போட்டிக்கும் தகுதி பெற்றனர். இவர்களை, பள்ளி தலைமையாசிரியர் ஜீவகலா, வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, சாலினி ஆசிரியர்கள் வேடிவேலன், உஷாதிலகவதி வாழ்த்தி னர்.

