/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மல்லர் கம்பம் போட்டி: எம்.எம்.எஸ்., வெற்றி
/
மல்லர் கம்பம் போட்டி: எம்.எம்.எஸ்., வெற்றி
ADDED : ஜன 10, 2024 10:19 PM

பொள்ளாச்சி : மாநிலங்களுக்கு இடையேயான மல்லர் கம்பம் போட்டியில் பொள்ளாச்சி, கோபாலபுரம் எம்.எம்.எஸ்., மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
மாநிலங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டி, ஆனைமலை அன்னை மெட்ரிக் பள்ளியில் நடந்தது. அதில், பொள்ளாச்சி கோபாலபுரம் எம்.எம்.எஸ்., மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். போட்டியில், 10, 12, 14, 16 மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில் பள்ளியை சேர்ந்த அனுஸ்ரீ, நதியா, பவதாரினி, ரோஷினி, ஷியாம், ஸ்ரீஹரி ஆகிய மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.
மேலும், மூன்று மாணவர்கள், இரண்டாமிடமும், இரண்டு மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.