ADDED : ஏப் 12, 2025 02:00 AM
கோவை,:பரமக்குடி, நல்லுக்குறிச்சியை சேர்ந்தவர் பாரதிராஜா, 47; ஆக்டிங் டிரைவர். அவரது நண்பர் செந்தில் குமார். இருவரும், சின்னியம்பாளையம் பகுதியில் 'டெலி காலர்' அலுவலகம் அமைத்து, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்.
இதற்கு, 96 பேர் சம்மதம் தெரிவித்து, கடந்த 1ல் 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம், சின்னியம்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் பணத்தை செலுத்தி, பணி நியமன ஆணையை பெற்றனர்.
அப்போது, பணி ஆணை மீது, சந்தேகமடைந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீதர், 24, பாரதிராஜாவிடம் பணத்தை திருப்பி கேட்டதில் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரில், பாரதிராஜா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட செந்தில் குமாரை கோவை போலீசார் தேடி வருகின்றனர்.
