ADDED : ஏப் 08, 2026 06:34 AM
கோவை: சவுரிபாளையம், உப்பிலிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் நந்தினி, 35. மகளிர் சுய உதவி குழுவில், வங்கி கடன் வசூல் முகவராக உள்ளார். இவருக்கு, பீளமேட்டில் நிதி நிறுவனம் நடத்தி வரும் மோசஸ்டேனியல்,38 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் எட்டு ஆண்டுகளாக பழகி வந்தது இரு குடும்பத்தினருக்கும் தெரிந்தது. தகராறு ஏற்பட்டதால், மோசஸ் டேனியலுடன் பேசுவதை நந்தினி நிறுத்தினார்.
இந்நிலையில் நந்தினி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த போது, அவரது மொபைல் போனை மோசஸ் பறித்து சென்றார். அதை நந்தினி மீட்டு வந்தார்.
அப்போது நந்தினி மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை கண்காணிக்க, மோசஸ் டேனியல் மொபைல்போனுடன் லிங்க் ஏற்படுத்தியது நந்தினிக்கு தெரிய வந்தது. மோசஸ் டேனியலிடம் கேட்ட போது, அவரை தாக்கியதோடு, வீட்டையும் சேதப்படுத்தினார்.
படுகாயமடைந்த நந்தினி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், பீளமேடு போலீசார் மோசஸ் டேனியலை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
