/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் விற்பனையாளரை பாட்டிலால் தாக்கியவர் கைது
/
டாஸ்மாக் விற்பனையாளரை பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : மே 20, 2025 11:40 PM
அன்னூர்; டாஸ்மாக் கடை விற்பனையாளரை பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
அன்னூர் அருகே போயனூரை சேர்ந்தவர் ஆசான், 47. கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அன்னூர் ஓதிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கியுள்ளார். பின்னர் பாட்டிலை திருப்பி கொடுத்துவிட்டு, காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் கேட்டுள்ளார்.
கடை விற்பனையாளரான அன்னூர், அவிநாசி ரோட்டைச் சேர்ந்த ரவிக்குமார், 46, என்பவர் மதுபான லோடு வந்திருக்கிறது. இறக்கிவிட்டு பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆசான் பாட்டிலை உடைத்து ரவிக்குமாரை தாக்கினார். இதில் ரவிக்குமாரின் இடது கண் அருகே காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து தாக்கிய ஆசான் கைது செய்யப்பட்டு அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.