ADDED : அக் 23, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சாய்பாபா காலனி எம்.டி.பி. ரோட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் கேரள மாநில போக்குவரத்து கழக பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்சை கோழிக்கோட்டை சேர்ந்த ஊழியர் சாஜில், 48 சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒரு வாலிபர், பஸ் மீது கல் வீசினார். பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. சாஜில் இதுகுறித்து கேட்ட போது, அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டினார். சாஜில், சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணையில், பஸ் மீது கல் வீசியது, என்.ஜி.ஜி.ஓ., காலனி செங்காளிபாளையம் காந்தி காலனியைச் சேர்ந்த கோபிராஜ், 44 என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.