/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் கந்த சஷ்டி விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
/
மருதமலையில் கந்த சஷ்டி விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
மருதமலையில் கந்த சஷ்டி விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
மருதமலையில் கந்த சஷ்டி விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED : அக் 23, 2025 12:26 AM

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது.
நேற்று அதிகாலை, 5:10 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, நீல முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7:30 மணிக்கு, விநாயகர் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், யாகசாலை பூஜை நடந்தது.
காலை, 09:25 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின், கால சந்தி பூஜையும் நடந்தது.
சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, காப்பு கட்டப்பட்டது. பகல் 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, கற்பக விருட்ச வாகனத்திலும், மாலையில், கேடயம் வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கந்த சஷ்டி துவக்க விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 27ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, சூரசம்ஹாரமும்; 28ம் தேதி, காலை, 11:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.