/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்
/
487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்
487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்
487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்
ADDED : அக் 23, 2025 12:25 AM
கோவை: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில், 487 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதிமுறை மீறியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு கடைகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முதலே, ஆய்வு பணிகளை துவக்கிவிட்டோம். 487 கடைகளில் ஆய்வு செய்து, 74 மாதிரிகள் எடுத்துள்ளோம்.
மாதிரிகளின் பரிசோதனை முடிவு கிடைக்க, 14 நாட்கள் அவசியம். விதிமீறல் புகாரில், ஐந்து பேருக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்; சுகாதாரமின்மைக்கு ஐந்து பேர் மீது, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, '' என்றார்.