/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எர்ணாகுளம் - பரூனி இடையே சிறப்பு ரயில்
/
எர்ணாகுளம் - பரூனி இடையே சிறப்பு ரயில்
ADDED : அக் 23, 2025 12:25 AM
கோவை: பயணிகள் நெரிசலை தவிர்க்க, எர்ணாகுளம் - பரூனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - பரூனி (06183) சிறப்பு ரயில், எர்ணாகுளத்தில் இருந்து இன்று காலை 10:00 மணிக்கு புறப்பட்டு, 25ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரூனி சென்றடையும். படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சூலுார்பேட்டை, கூடுர், நெல்லுார், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல்கோட் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு, மதியம் 2:20 மணிக்கு சிறப்பு ரயில் வந்து செல்லும்.