/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு புகுந்து திருடிய நபர் கைது
/
வீடு புகுந்து திருடிய நபர் கைது
ADDED : ஜன 13, 2025 12:18 AM
சூலுார்,; சூலுார், பட்டணம் கிரீன் அவென்யூவை சேர்ந்தவர் நாகராஜ், 24. இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
கடந்த, 10 ம்தேதி கணவன் , மனைவி இருவரும் கம்பெனிக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அப்போது, ஒரு நபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து பைக்கில் தப்பியுள்ளார். துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை பட்டணம் பிரிவுக்கு சென்ற போது, வீட்டில் திருடிய நபரை அடையாளம் கண்டனர். அந்நபரை பிடித்து விசாரித்ததில், போத்தனுார் சீனிவாசா நகரை சேர்ந்த சதீஷ்குமார், 29 என்பதும், தேவராஜ் வீட்டில் திருடியதும் தெரிந்தது.
இதையடுத்து அந்நபர் சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்குப் பின், வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.