/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமணமாகாத பெண்ணை ஏமாற்றியவர் கைது
/
திருமணமாகாத பெண்ணை ஏமாற்றியவர் கைது
ADDED : மார் 23, 2025 10:12 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், திருமணமாகாத பெண்ணை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் கூறியதாவது:
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் டி. கோட்டம்பட்டியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தியாகராஜனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ள நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
அதன் காரணமாக, அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து கர்ப்பத்தை கலைக்க தியாகராஜன் சொல்லவே, அப்பெண் தாராபுரத்தில் உள்ள தனது அக்காவுக்கு பிரசவம் பார்த்ததாகவும், இவருக்கும் பரிசோதனை செய்து, கடந்த பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.
சிகிச்சைக்கு பணம் இல்லாததால், அதே மருத்துவமனையில் அறிமுகமான ஒரு பெண்ணிடம் தனது பிரச்னையை கூறி, குழந்தையை விலைக்கும் கொடுத்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல பொள்ளாச்சி திரும்பிய அப்பெண்மணி, ஏதும் நடக்காதது போல் இருந்துள்ளார். ஓரிரு தினங்களில், இந்த தகவல் தியாகராஜன் மனைவிக்கு தெரிந்த நிலையில், அவரது குடும்பத்தார் அப்பெண்ணிடம் சண்டையிட்டுள்ளனர்.
அதில் மன உளைச்சல் அடைந்த பெண்மணி, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தன்னை தியாகராஜன் ஏமாற்றியதாக புகார் அளித்ததன் பேரில், அவரை போலீசார் கைது செய்தனர். அதே நேரம் குழந்தையை பணத்துக்காக விற்றதன் பேரில், பெண்மணி மீது வழக்கு பதியப்பட்டு, தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.