தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மது பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

 மது பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

 மது பார் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : மார் 14, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: போத்தனூர் அடுத்த கோணவாய்க்கால்பாளையம் அருகேயுள்ள டாஸ்மாக் பார் ஊழியர் திருமலை, 56. நேற்று முன்தினம் வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்தார். அங்கு வந்த ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.

தன்னிடம் பணம் இல்லை என திருமலை கூறியதும், அந்நபர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து திருமலை வயிற்றில் வைத்து அச்சுறுத்தியதுடன், திருமலை ஒரு கவரில் வைத்திருந்த ஐந்தாயிரம் ரூபாயை பறித்தார். திருமலை சத்தமிடவும் கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

திருமலை புகாரில் போத்தனூர் போலீசார் விசாரித்து, எல்.ஜி.நகர், பேஸ் 1 பகுதியை சேர்ந்த டேவிட்ராஜா, 27 என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us