/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : டிச 11, 2025 06:43 AM
போத்தனூர்: பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் சாபியா, 35; கணவர் சவுகத் அலி. கடந்த, 8ல் சவுகத் அலியின் நண்பர் தனது ஆட்டோவை இவரது வீட்டினருகே நிறுத்தினார்.
அப்போது அங்கு வந்த, அதே பகுதியிலுள்ள ஸ்ரீ முருகன் நகரை சேர்ந்த செல்வகுமார், 35 தகாத வார்த்தைகளால் அவரை திட்டினார். இதுகுறித்து சாபியா கேட்டபோது, அவரையும் திட்டி தாக்கியவர், கீழே கிடந்த கற்களை எடுத்து, சாபியாவின் வீட்டிற்குள் வீசினார். சாபியா சத்தம் போடவும் அருகிலிருந்தோர் அங்கு வந்தனர்.
இதனைக்கண்ட செல்வகுமார், ஒரு கல்லை காட்டி அனைவரையும் மிரட்டினார். சாபியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
சாபியா புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, செல்வகுமாரை கைது செய்தனர்.

