/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கி கடன் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது
/
வங்கி கடன் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 09, 2024 02:09 AM
கோவை:திருப்பூர், திரு.வி.கே., நகர் 4வது வீதியை சேர்ந்தவர் பல் மருத்துவர் கிஷோர் குமார், 45. இவர் திருப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பல் மருத்துவமனைகளை நடத்துகிறார். மேலும், பல மாவட்டங்களில் கிளைகளை திறக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்காக வங்கியில் கடன் பெறுவதற்காக, கோவையை சேர்ந்த சக்திவேல் என்பவரை அணுகினார். அவரும், 15 கோடி ரூபாய் வரை தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பெற்று கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
மேலும், இதற்கு கமிஷனாக, சக்திவேலிடம், கடந்த, 2023 டிச., முதல் 2024 ஆகஸ்ட் வரை 60 லட்சம் ரூபாயை கிஷோர்குமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும், பல நாள் ஆகியும் கடன் ஏற்பாடு செய்யாததால், கொடுத்த பணத்தை கிஷோர்குமார் திருப்பி கேட்டுள்ளார். சக்திவேல் தரவில்லை. கிஷோர்குமார் அளித்த புகாரின்படி, கோவை ராமநாதபுரம் போலீசார், சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.