/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ம.க., முன்னாள் நிர்வாகியின் தாய் போட்டோ 'மார்ப்' செய்தவர் கைது
/
பா.ம.க., முன்னாள் நிர்வாகியின் தாய் போட்டோ 'மார்ப்' செய்தவர் கைது
பா.ம.க., முன்னாள் நிர்வாகியின் தாய் போட்டோ 'மார்ப்' செய்தவர் கைது
பா.ம.க., முன்னாள் நிர்வாகியின் தாய் போட்டோ 'மார்ப்' செய்தவர் கைது
ADDED : டிச 28, 2024 06:27 AM

கோவை; பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலளராக இருந்தவர் அசோக் ஸ்ரீநிதி. இவர், 'மை வி3' நிதி நிறுவன மோசடி குறித்து, கோவையில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, அவருக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் தன்னையும், தன் குடும்பத்தினர் குறித்தும் அவதுாறுகள் பரப்பப்படுவதாகவும், தாய் போட்டோவை 'மார்ப்' செய்துபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பேஸ்புக்கில் பதிவிட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த சிவ பெருமாள், 33 என்பது தெரியவந்தது. அவர் திருவள்ளூரில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. போலீசார் திருவள்ளூர் சென்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 'மை வி 3' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். லாபமும் பெற்றுள்ளார். அவரின் பரிந்துரையில் சிலரும் முதலீடு செய்துள்ளனர். அசோக் ஸ்ரீநிதி வழக்கு பதிவு செய்ததால், முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்ப வரவில்லை. இதனால் அவர்கள் சிவ பெருமாளிடம் பணத்தை கேட்டுள்ளனர்.ஆத்திரத்தில்,அசோக் ஸ்ரீநிதியின் தாய் படத்தை, தவறாக சித்தரித்து வெளியிட்டதாக தெரிவித்தார்.
பா.ம.க.,நிர்வாகி தலைமறைவு
இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய, போலீசார் தாமதப்படுத்துவதாக கூறி, கடந்த 13ம் தேதிஅசோக் ஸ்ரீநிதி, சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து தகராறு செய்தார்.
அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.ஐ.,யை மிரட்டி, அவரிடம் இருந்த ஆவணங்களை கிழித்துள்ளார்.இச்சம்பவம்தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் அசோக் ஸ்ரீநிதிமீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.