ADDED : மார் 23, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுாரில் கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அன்னுாரில், அவிநாசி சாலையில், போலீஸ் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சில மாதங்களாக அவிநாசி சாலையில் தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் திருப்பூர், போயம்பாளையத்தை சேர்ந்த கர்ணன், 38 என்பவரிடம் சோதனை செய்த போது, 30 கிராம் கஞ்சா பிடிபட்டது. அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
