/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டலில் விபசாரம்; ஒருவர் கைது
/
ஓட்டலில் விபசாரம்; ஒருவர் கைது
ADDED : டிச 25, 2024 10:33 PM
கோவை; காந்திபுரம் சுற்றியுள்ள நட்சத்திர ஓட்டல்களில் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து, விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காந்திபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு அறையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இதேபோல், சுற்றியுள்ள 5 ஓட்டல்களில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரித்ததில், காரைக்குடியை சேர்ந்த குமரப்பன், 48 புரோக்கராக இருந்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர், 'வாட்ஸ் ஆப்' குழு, வெப்சைட்கள் மூலம், தேசிய, சர்வதேச அளவில் உள்ள விபச்சார புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களை கோவைக்கு வரவழைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
தனிப்படை போலீசார், குமரப்பனின் 'ஐ.பி.,' முகவரியை வைத்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர், கேரள மாநிலம் மண்ணார்காடு பகுதியில் இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று, குமரப்பனை கைது செய்தனர்.