UPDATED : மே 01, 2026 04:25 PM
ADDED : மே 01, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று காட்டூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காந்திபுரம் முதல் வீதியில், சித்தாபுதுாரை சேர்ந்த முகமது அசாரூதின், 27 கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, கஞ்சா வாங்கி பயன்படுத்தும் நபர்கள் யார் என்றும், விற்பனை செய்யும் நபர்கள் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
