/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோலமிட்ட பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
/
கோலமிட்ட பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : நவ 11, 2025 10:56 PM
கோவை: காட்டூர் சத்தி ரோடு, ஜி.பி.தோட்டம், சி.கே. காலனியைச் சேர்ந்த முருகேசன் மனைவி சரண்யா, 35. கடந்த, 2ம் தேதி அதிகாலை சரண்யா வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது இரு வாலிபர்கள் பைக்கில் வந்து, அவர் அணிந்திருந்த செயினை பறித்தனர். சரண்யா செயினை இறுக பிடித்துக் கொண்டதால், செயினின் ஒரு பகுதி மட்டும் வாலிபர்கள் கையில் சிக்கியது.
சரண்யாவின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் திரண்டனர். பைக்கில் வந்த இருவரும் தப்ப முயன்றனர். பைக் ஸ்டார்ட் ஆகாததால், அப்படியே போட்டு விட்டு ஓடினர். சரண்யா புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பைக்கின் பதிவு எண்ணை கொண்டு தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் பைக், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவருடையது எனத் தெரிந்தது. அவரது நண்பர்கள், திருச்சூரை சேர்ந்த சுனில், 32, மலப்புரத்தை சேர்ந்த முஸ்தபா ஆகியோர் பைக்கை வாங்கி வந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. சுனிலை கைது செய்த போலீசார், தலை மறைவாக உள்ள முஸ்தபாவை தேடி வருகின்றனர்.

