/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பியால் தாக்கிய நால்வர் மீது வழக்கு
/
கம்பியால் தாக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2025 10:57 PM
கோவை: பீகாரை சேர்ந்தவர் கோவிந்தகுமார், 24. ஆறு மாதத்துக்கு முன் வேலை தேடி கோவை வந்த இவர் ஆர்.எஸ்.புரத்தில் தங்கியுள்ள, தனது ஊரை சேர்ந்த ரஜீத் உடன் தங்கினார். இருவரும், திருமண நிகழ்ச்சிக்கான கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வந்தனர்.
இதேபோல், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிலர் பூமார்க்கெட் பகுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் கோவிந்தகுமார், ரஜீத் செல்லும் பஸ்சில் தினமும் சென்று வந்தனர். கடந்த, 3ம் தேதி சாய்பாபா காலனி பகுதியில் இருந்து கோவிந்தகுமார் பஸ்சில் ஏறினார்.
அப்போது சந்தோஷ், பிரதீப், லாகுஷ், டிலோ ஆகியோர் அவரை மிரட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தகுமார், ரஜீத் ஆகியோர் அறையில் துாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேரும், அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

