/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
/
டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
ADDED : நவ 11, 2025 10:57 PM
போத்தனூர்: சுந்தராபுரம் நான்கு சாலை சந்திப்பில், வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன. அப்போது மதுக்கரை மார்க்கெட் சாலையின் துவக்கத்தில் திடீரென ஒரு நபர், தான் வைத்திருந்த கேனிலிருந்த டீசலை, தன் மீது ஊற்றி, தீ பற்ற வைக்க முயன்றார்.
அப்பகுதியிலிருந்தோர் அந்நபரை தடுத்து,போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சுந்தராபுரம் போலீஸ் எஸ்.ஐ., பொன்னுசாமி, டீசல் கேனை பறித்ததுடன், அந்த நபர்மேல் தண்ணீரை ஊற்ற செய்தார்.
விசாரணையில், அந்நபர் கணேசபுரம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கஸ்பர், 28 என்பதும், வியாபாரத்திற்காக இருவரிடம் தலா ரூ.4 லட்சம் வாங்கியதும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தொகையை திருப்பி தரமுடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது.
அங்கு வந்த அவரது சகோதரி, கஸ்பரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

